40 நாட்கள் நடிக்க ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?- வீடியோ

  • 6 years ago
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க ரஜினிக்கு அளிக்கப்படும் சம்பளம் பலரையும் வியக்க

வைத்துள்ளது.

காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை

சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரஜினி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க

உள்ளார்.

ரஜினி, விஜய் சேதுபதி கூட்டணியால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ. 65 கோடி சம்பளமாம். படப்பிடிப்பு இந்த ஆண்டு

துவங்கி படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜுக்கு 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ரஜினி. இந்த படத்தின் மூலம் முதன்

முதலாக அனிருத் ரஜினியுடன் சேர்ந்து பணியாற்றுகிறார். தலைவர் படத்திற்கு இசையமைக்கும்

மகிழ்ச்சியில் உள்ளார் அனிருத்.

ரஜினி தற்போது அமெரிக்காவில் உள்ளார். அவர் இந்த வாரம் சென்னை திரும்புகிறார் என்று

கூறப்படுகிறது. அவர் திரும்பி வந்ததும் காலா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாராம்.
கபாலி படத்தை அடுத்து பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன் மாதம் 7ம் தேதி

ரிலீஸாக உள்ளது. பா. ரஞ்சித் தான் பேச நினைக்கும் அரசியலை ரஜினியை வைத்து படம் மூலம் பேசி

வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

According to reports, Rajini is getting paid Rs. 65 crore for his upcoming

movie with Karthik Subbaraj. The untitled movie is bankrolled by Sun

pictures.

#rajinikanth #superstar #newmovie #karthiksubbaraj


Recommended