ஜெனிபாவிடம் விசாரணை.... சந்தானம் கிடுக்கி பிடி கேள்வி....

  • 6 years ago
பகுதிநேர பேராசியர் கத்தியால் குத்தி காயம் அடைந்த துறைத்தலைவர் ஜெனிபாவிடம் விசாரணை அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தினார்.

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் இதழியல் துறையின் தலைவராக பணியாற்றி வருபவர் ஜெனிபா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்

பகுதி நேர பேராசியராக பணியாற்றிய ஜோதி முருகன் என்பவர் பணியில் இருந்த போது கத்தியால் ஜெனீபாவை கொடூரமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று தற்போது மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். பேராசியை நிர்மலா தேவி வழக்கில் ஆளுநர் சார்பில் நியமணம் செய்யப்பட்ட விசாரணை அதிகாரி சந்தானம் நேற்று ஜெனீபாவிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஜோதி முருகன் கத்தியால் தாக்கிய சம்பவம் குறித்தும் சந்தானம் ஜெனீபாவிடம் ஒருசில கேள்விகளை எழுப்பியதுடன் நிர்மலா தேவி குறித்தும் விசாரணை நடத்தியுள்ளார். அதிகாரி சந்தானத்தின் விசாரணை வளையத்தில் பல்கலை கழகத்தில் பணியாற்றும் பேராசியர்கள் பலர் உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் கடந்த ஆண்டுகளில் பல்கலை கழகத்தில் பணியாற்றிய பேராசியர்கள் மாணவிகளிடம் பாலியல் தொடர்பான விவகாரத்தில் சிக்கியுள்ளனரா என்பது குறித்தும் சந்தானம் விசாரணை நடத்தி வருகிறார்.

Des : The investigating officer Santhanam inquired into the incident, who was injured by a knife in the area.

Recommended