புதிய விதிமுறையை பயன்படுத்தி அணிமாற போகும் வீரர்கள் யார் ?

  • 6 years ago
கால்பந்து போட்டிகளின்போது, இடையில் வீரர்களை வேறு அணிகள் வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு அளிப்பது போல, ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதில் யார் யார் எந்தெந்த அணியில் இருந்து மாறும் வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது.

இதுவரை 24 ஆட்டங்கள் முடிந்து உள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 6 ஆட்டங்களில் விளையாடி உள்ளன. சில அணிகள் காயம் காரணமாக சில வீரர்களை இழந்துள்ளன. இந்த சீசனில் 60 ஆட்டங்களில், கிட்டத்தட்ட பாதி அளவு ஆட்டங்கள் முடிய உள்ள நிலையில், முதல் முறையாக வீரர்களை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

some players going change to other teams by using new rule in this ipl season

Recommended