விஜய் டிவிக்கு காலா தொலைக்காட்சி உரிமை!

  • 6 years ago
ரஜினிகாந்த் படங்களின் தொலைக்காட்சி உரிமை ஆளும் கட்சியின் சேனல்களுக்குப் போகும். அல்லது எப்போதும்போல சன் குழும சேனல்கள் வசமாகும். சிவாஜி தொடங்கி, கபாலி வரைக்கும் அப்படித்தான். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை காலா படத்தின் சேட்டிலைட் உரிமை விஜய் டிவிக்குப் போயிருக்கிறது. முதல் முறையாக ரஜினி படம் ஒன்றை அந்த சேனல் பெரிய விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். இதனை அதிகாரப்பூர்வமாக தனுஷ் மற்றும் விஜய் டிவி அறிவித்துள்ளனர். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படம் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் கேரியரில் ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படம் இது என்பதால், பெரும் விலைக்கு லைகா நிறுவனம் இந்தப் படத்தை வாங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நேரடியாக, ஒரே நேரத்தில் இந்தப் படம் வெளியாகிறது. உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான அரங்குகளில் படத்தை வெளியிட வேலைகள் நடக்கின்றன. ஜூன் 7-ம் தேதி காலா ரிலீஸ் நாள்!


The Satellite rights of Rajinikanth's Kaala has snapped by Vijay TV for the first time.

Recommended