டாக்டரா சினிமா நடிகையா சாய் பல்லவி?

  • 6 years ago
அந்த ஆசை வந்தால் சினிமாவை விட்டுவிட்டு கிளம்பிவிடுவேன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
டாக்டருக்கு படித்துள்ள சாய் பல்லவி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் படங்களிலும் நடித்துக் கொண்டு, மருத்துவத்தையும் பார்க்க முடியாது என்று நினைக்கிறார் சாய் பல்லவி.
அதனால் படித்த படிப்புக்கு வேலை செய்யாமல் நடிகையாக மட்டும் உள்ளார். தனது பெயருக்கு முன்பு டாக்டர் என்ற பட்டத்தை கூட பயன்படுத்துவது இல்லை.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள தியா படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ஹீரோ நாகசவுரியா சாய் பல்லவி படப்பிடிப்பின்போது முரட்டுத்தனமாக நடந்து எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு சீன் போட்டதாக புகார் தெரிவித்தார்.
நான் படப்பிடிப்பு தளத்தில் யாருடனும் பேச மாட்டேன். நான் பேசாமல் இருந்ததால் நாகசவுரியா என்னை தவறாக புரிந்து கொண்டுவிட்டார் போல. அவர் என் மீது புகார் தெரிவித்த பிறகு அவருடன் பேச கால் செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்கிறார் சாய் பல்லவி.
நாகசவுரியா மட்டும் அல்ல எந்த ஹீரோக்களுடனும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டால் என் காட்சிகள் குறித்து மட்டுமே யோசிப்பேன் என்கிறார் சாய் பல்லவி.
படித்த படிப்புக்கு டாக்டராக வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டால் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு சென்றுவிடுவேன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார். அவருக்கு அந்த ஆசை சீக்கிரம் வர வேண்டும் என்று அவரை போட்டியாக நினைப்பவர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.

Actress Sai Pallavi said in an interview that she will quit film industry if she wishes to practice medicine for which she has a degree.

#saipallavi #dhiya #karu #release #interview

Recommended