ஒரே சோக கீதம் பாடும் ரகுல் ப்ரீத் சிங்

  • 6 years ago
படங்கள் தோல்வி அடைவது குறித்து ரொம்பவே ஃபீல் செய்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் பாலிவுட் பக்கமும் சென்று வந்துள்ளார். தமிழில் அவர் நடித்த படங்கள் ஓடாததால் பிளாப் நடிகை என்று ஒதுக்கப்பட்டார்.
தீரன் அதிகாரம் ஒன்று ஹிட்டான பிறகே ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கோலிவுட்டில் நல்ல பெயர் கிடைத்தது.
படங்கள் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் நம் கையில் இல்லை. இருப்பினும் படங்கள் ஓடாவிட்டால் ராசியில்லாதவர் என்று ஒதுக்குகிறார்கள் என்று ஃபீல் பண்ணியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
இந்த படம் ஓடக் கூடாது என்று நினைத்து எந்த படத்தையும் யாரும் எடுப்பது இல்லை. அனைவரும் கஷ்டப்பட்டு தான் ஒவ்வொரு படத்தையும் எடுக்கிறோம். அப்படி இருந்தும் சில படங்கள் ஓடுவது இல்லை என்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.
படங்களின் வெற்றி, தோல்வியை ரசிகர்கள் தீர்மானிக்கிறார்கள். நம் படம் ஓடாவிட்டால் யாருமே நம்மை கண்டுகொள்வது இல்லை. நான் நடித்த சில படங்கள் ஓடவில்லை. படம் ஓடாவிட்டால் யாரையும் குறைகூற முடியாது என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
நான் தோல்வி படம் கொடுத்த இயக்குனர்களை ஒதுக்க மாட்டேன். ஹிட்டாகும் என்று நினைத்து எடுக்கும் படம் தோல்வி அடையும், பிளாப் ஆகும் என்று நினைத்த படம் ஹிட்டாகும். இது நடந்துள்ளது என்று ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

Actress Rakul Preet Singh is all philosophical about movie's success and failure. Rakul who is busy in Kollywood now earlier acted in flop movies.

#rakulpreetsingh #kollywood #tamilcinema

Recommended