ஹன்சிகாவுக்குள் இப்படி ஒரு திறமையா?- வீடியோ

  • 6 years ago
நடிகை ஹன்சிகாவுக்குள் ஒரு அற்புதமான திறமை உள்ளது.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹன்சிகா ஆதரவில்லா குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தனது பிறந்தநாளின்போது குழந்தைகளை தத்தெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
27 வயதில் 30 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். பெற்றால் தான் பிள்ளையா, இவர்கள் அனைவரும் என் பிள்ளைகளே என்கிறார் ஹன்சிகா.
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த ஹன்சிகாவின் மார்க்கெட் தற்போது லைட்டா டல்லாக உள்ளது. பழையபடி பிசியான நடிகையாகிவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஹன்சிகா.
ஹன்சிகா நடிகை மட்டும் அல்ல நல்ல ஓவியரும் கூட. அவர் வரைந்த புத்தரின் ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஹன்சிகாவுக்கு இப்படி ஒரு திறமையா என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.


Hansika is not only a talented actress but also a gifted painter. Celebrities and fans are appreciating her for the amazing talent.

#hansika #painting #vivek

Recommended