மீண்டும் அமெரிக்காவுக்கு ஆன்மீகப் பயணம் செய்கிறார் ரஜினிகாந்த்- வீடியோ

  • 6 years ago
ஆன்மீக அரசியலில் குதிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் இமயமலை பயணம் மேற்கொண்டார். அடுத்த மாதம் அமெரிக்க பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1996 ஆம் ஆண்டு முதலே வாய்ஸ் கொடுத்து வருகிறார். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று கடந்த 20 ஆண்டு காலமாகவே அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் ஓய்வு தமிழக அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறும் ரஜினிகாந்த், தான் அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். இதனையடுத்து தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது. ஆன்மீக அரசியல் என்று கூறிய ரஜினி, கட்சி, கொள்கை பற்றி கேள்வி கேட்டதற்கு சரியான பதிலை சொல்லவில்லை. தமிழகத்தில் நிலவும் எந்த சம்பவங்களுக்கும் கருத்து கூறவில்லை

Sources said Actor Rajini kanth may visit America next month.

Recommended