காமன்வெல்த் போட்டி..தீபிகா பலிகல், ஜோஷ்னா சின்னப்பா, ஸ்குவாஷ் வெள்ளி வென்றனர்-வீடியோ

  • 6 years ago
காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற ஸ்குவாஷ் வீராங்கனைகளான தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா பலிகல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா உள்ளிட்டோர் நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் போட்டிகள் நடந்தன. இதில் 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என, 66 பதக்கங்களை வென்று, பதக்கப்பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது. காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகள் நாடு திரும்பி வருகின்றனர்.

Recommended