இது சமூகவலைத்தளங்களில் தீர்க்கக் கூடிய பிரச்சனை அல்ல-எடப்பாடி பழனிச்சாமி-வீடியோ

  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். காவிரி பிரச்சினையை சட்ட ரீதியாக அணுக வேண்டுமே தவிர சமூகவலைத்தளங்களில் தீர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில், அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி குறித்து, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன்ராவ் கூறியது, உண்மைக்கு புறம்பானது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Recommended