ஜம்முகாஷ்மீரின் 8 வயது சிறுமி ஆசிஃபா கொலை-போராட்டங்கள் வலுத்தது

  • 6 years ago
கத்துவா மற்றும் உனாவில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நள்ளிரவில் மெழுகுவர்த்தி பேரணி நடத்தினார். தூங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசை எழுப்பும் விதமாகவே இந்த பேரணி நடப்பதாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். ஜம்முகாஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிஃபா 8 பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அரசு அதிகாரி, காவல் அதிகாரி உள்பட 8 பேர் ஆசிஃபா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கைதாகியுள்ளவர்களை விடுவிக்கக் கோரி அந்த மாநில பாஜக அமைச்சர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Congress president Rahul Gandhi led a midnight candlelight vigil to India Gate in New Delhi to demand justice for Asifa and the teenager in Uttar Pradesh's Unnao, who was allegedly raped by a BJP lawmaker last year.

Recommended