இயக்குநர்கள், நடிகர்கள் இணைந்து ஆரம்பித்த தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை!

  • 6 years ago
திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் இணைந்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை எனும் புதிய அமைப்பை இன்று தொடங்கினர். இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்கே செல்வமணி, வீ சேகர், அமீர், வெற்றி மாறன், ராம், சுப்பிரமணிய சிவா, தங்கர் பச்சான், வ கவுதமன் மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து இந்த அமைப்பினை அறிவித்தனர். தமிழர் பண்பாடு, கலை, உரிமைகளைக் காக்கவே இந்த அமைப்பு என்றும், தமிழரின் அதிகாரம் வேற்று மொழிக்காரர்களுக்குப் போய்விடக்கூடாது என்பதற்காகவே இந்த அமைப்பு தொடங்கப்பட்டதென்றும் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் தெரிவித்தனர். பேரவையில் இருப்பவர்கள் அரசியல் சாராமல் இருக்க வேண்டும் என்று கூறிய பாரதிராஜா, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள். ஐபிஎல் போட்டியை தள்ளி வைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாக முதலமைச்சர் கூறினார். ஐபிஎல் போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும். காவிரி போராட்டத்தை திசைத்திருப்பவே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறதோ என்ற ஐயம் உள்ளது," என்றார்.

Tamil film personalities like Bharathiraja, Ameer have announced a new forum to save Tamil culture.


#directors #actors #association

Recommended