விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்- வீடியோ

  • 6 years ago
கன்னியாகுமரி மாவட்டம் குமரி வர்த்தக துறைமுக எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக குளச்சல் முதல் நீரோடி வரையிலான 3000-க்கு மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் இனயம் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது இதனையடுத்து மீனவர்களிடையே கடும் எதிர்ப்புகிளம்பியதால் கன்னியாகுமரியை அடுத்த மணக்குடியில் அமைக்கப்போவதாக அறிவித்தது இதற்க்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று வர்த்தக துறைமுக எதிர்ப்பு மற்றும் ஆதரவு குழுக்கள் இன்று போராட்டம் நடத்த போவதாக அறிவித்தன இதற்க்கு காவல்துறை தடை விதித்த நிலையில் பா.ஜ.க கடையடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றது ஆனால் எதிர்ப்பு குழு திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அறிவித்தது
இந்நிலையில் குமரி வர்த்தக துறைமுக எதிர்ப்பு போராட்டத்திற்கு குளச்சல்.,வாணியக்குடி.,குறும்பனை.,தேங்காய்பட்டணம் நீரோடி வரையிலான சுமார் 20-க்கு மேற்பட்ட மீனவ கிராமங்களில் 3000-க்கு மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்டகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

des : More than 3000 anti-fishermen from Kozhikode to the water tank in the Kanyakumari District are facing a strike against Kumari trade port.

Recommended