சோறு போட்டு படிக்க சொல்லும் பதிய காமராஜர்- வீடியோ

  • 6 years ago
மாணவ,மாணவிகள் சாதி சமய வேறுபாடுகளை மறந்து கல்வி கற்க வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கு அறுசுவை சமபந்தி உணவளித்த தலைமை ஆசிரியை

வேலூர் மாவட்டம் ,திருப்பத்தூர் அடுத்த ராஜாவூர் கிராம பகுதியில் இயங்கிவரும் அரசினர் ஆரம்பபள்ளி இயங்கி வருகிறது இதில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் இந்திரா இந்த ஆரம்பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 39 மாணவர்கள் பயின்று வருகின்றனர் இப்பள்ளியில் கழிவறைகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக பராமரிப்பதுடன் வகுப்பறைகளையும் பராமரித்து வருகின்றனர் மேலும் மாணவர்களுக்கு சொந்த செலவிலேயே தலைமை ஆசிரியை மேஜை நாற்காலிகளை வாங்கி கொடுத்து ஆசிரியர்களை வைத்து சிறப்பாக பாடம் நடத்துகிறார் அதே போன்று இப்பள்ளியில் மாணவ,மாணவிகள் சிறுவயதிலேயே பேச்சுப்போட்டி கட்டுரை,விளையாட்டு என அனைத்து போட்டிகளிலும் பதக்கங்களையும் சான்றுகளையும் வாங்கி குவித்துள்ளனர் இங்கு ஆங்கில வழிக்கல்வியும் சிறப்பாக கற்பிக்கப்படுகிறது மேலும் மாணவர்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் 10 மாணவர்களுக்கு தலா.200வீதம் தனது ஊதியத்தில் ஒருதொகையை எடுத்து தலைமை ஆசிரியை இந்திரா சிறுசேமிப்பும் கட்டி வருகிறார் ஏழை மாணவர்களும் பங்கேற்று தங்களுக்கான சேமிப்பை சேமித்து வைக்கின்றனர் தலைமை ஆசிரியை இந்திரா ஆண்டுதோறும் தனது சொந்தமாக ஒரு மாத ஊதியத்தை எடுத்து மாணவ,மாணவிகள் சாதி சமய வேறுபாடுகளை மறந்து கல்வி கற்க வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை அறுசுவை சமபந்தி உணவளித்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார்

DES : Students and students should learn to forget the caste differences and teach the teacher

Recommended