நடிகர் நாணி செம ஹாப்பி ட்வீட்

  • 6 years ago
தெலுங்கு நடிகர் நானி, அடுத்து ஶ்ரீராம் ஆதித்யா இயக்கும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
நானி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் நடிகர் நாகார்ஜுனாவும் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் தான் ஷூட்டிங்கில் இணைந்திருக்கிறார் நாகார்ஜுனா.
இந்நிலையில், "குழந்தை போல இன்று ஷூட்டிங் செல்கிறேன்." என நானி ட்விட்டரில் மகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம், இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நாகார்ஜுனா கலந்துகொண்டது தானாம்.
அந்த மகிழ்ச்சியை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் நானி. "இன்று காலை ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டிக்கு ஷூட்டிங் செல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு குழந்தை போல உணர்கிறேன். நான் இப்படி இருக்க என்ன காரணம் தெரியுமா? இன்றுதான் 'கிங்' ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார். வெல்கம் நாகர்ஜுனா சார்” என்று தெரிவித்துள்ளார் நானி.
மூத்த நடிகரான நாகார்ஜுனா சமீபமாக இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். 'தோழா' படத்தில் கார்த்தியுடன் நடித்த நாகார்ஜுனா, தற்போது நானியுடன் இணைந்துள்ளார்.

Nani shared his excitement to joined with Nagarjuna on twitter.

#nagarjuna #nani #telugu