பேஸ்புக்கில் நாள் குறித்து கொல்லப்பட்ட தலித் இளைஞர்

  • 6 years ago
மத்திய பிரதேசத்தில் கோபி பரியா என்ற பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலித் இளைஞர் உயர் சாதி இந்துக்களால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இவரை கொலை செய்ய போகிறோம் என்று 2 நாள் முன்பு பேஸ்புக்கில் தகவல் கொடுத்துவிட்டு கொலை செய்து இருக்கிறார்கள். கடந்த மார்ச் 20ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதன்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி இனி அரசு ஊழியர்களை கைது செய்ய முடியாது என்று கூறியது. இதற்கு எதிராக இந்தியா முழுக்க தலித் மக்கள் போராடி வருகிறார்கள். இதில் எதிர்ப்பாராத விதமாக 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்று உயர்சாதியை சேர்ந்த சில விஷமிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



A Dalit man named Gobi Pariyaa killed after a huge protest in North India. He was the one who lead the protest on Dalit issue in Madhya Pradesh. Killer announced two days ago that they are going to kill him and did.

Recommended