தாறுமாறாக ஓடிய பேருந்து... மடக்கிய போலீஸ்...

  • 6 years ago
சாலையில் தாறுமாறாக ஓடிய பேருந்தை மடக்கி பிடித்த போக்குவரத்து போலீசார் மது போதையில் இருந்த ஓட்டுநரை கைது செய்தனர்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பொம்பூருக்கு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது.இந்தப் பேருந்து நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேருஜி சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாடின்றி தாறுமாறாக ஓடியது. இதனால் பேருந்தின் உள்ளே இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினர். சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் அச்சமடைந்தனர்.அப்போது பேருந்து நேருஜி சாலையில் சிக்னல் அருகில் வந்த போது போக்குவரத்தை போலீஸார் அந்தப் பேருந்தை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். ஆனால் பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் திருச்சி சாலையில் திருப்பிக்கொண்டு சென்றார்.இதனால் அதிர்ச்சியடைந்த போக்குவரத்துப் போலீஸார் விரட்டிச் சென்று பேருந்தை மறித்து நிறுத்தி ஓட்டுநரை கீழே இறக்கினர். அப்போது ஓட்டுநர் மது போதையில் இருந்தது தெரியவரவே அவரை கைது செய்தனர். இதையடுத்து பயணிகளை மாற்றுப்பேருந்தில் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

des ; Traffic driven by a police driver who was drugged by the police on the road.

Recommended