போட்டோஷாப்பின் மூலம் ஒல்லியான ஐஸ்வர்யா ராய்!

  • 6 years ago
பிரபல பத்திரிகையின் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராயை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். பிரபல பத்திரிகை நடத்திய போட்டோஷூட்டில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். பல்வேறு உடைகள் அணிந்து அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளனர். இந்த புகைப்படத்தை அருமையாக போட்டோஷாப் செய்துள்ளனர். ஐஸ்வர்யாவின் கால்களை காணவில்லை. அவர் நிஜத்தை விட இதில் ஒல்லியாக உள்ளார் என்று ஒருவர் தெரிவித்துள்ளார். புகைப்படத்திற்காக அவர்கள் புதிய ஐஸ்வர்யா ராயை உருவாக்கியுள்ளனர். போட்டோஷாப்பிற்கும் ஒரு எல்லை உண்டு என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ராய் மீண்டும் போட்டோஷூட்டில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. ஆனால் அவரின் நிஜ புகைப்படங்களை பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். ஐஸ்வர்யா ராய் நிஜத்தில் இப்படி இல்லை. புகைப்படத்திற்காக இப்படி ஒல்லியாக காண்பித்துள்ளனர். அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் இப்படி இருந்தார் என்று ஒருவர் நொந்துள்ளார்.


Aishwarya Rai Bachchan's latest photoshoot for Vogue is all over the social media. While, some fans are swooning over the stunning look of Aishwarya Rai Bachchan, some are busy in claiming that the pictures of Mrs Bachchan are photoshopped as they can't see her 'hips or legs'.

Recommended