பத்ம பூஷன் விருது பெற்ற தோனிக்கு குவியும் பாராட்டுக்கள்

  • 6 years ago
பத்ம பூஷன் பெற்றுள்ள டோணியை தமிழக வீரர் அஸ்வின் வாழ்த்தி உள்ளார். அதேபோல் நிறைய வீரர்கள் அவரை வாழ்த்தி இருக்கிறார்கள். 2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் கிரிக்கெட் வீரர் டோணிக்கு பத்ம பூஷன் அறிவிக்கப்பட்டது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பத்ம பூஷன் அறிவிக்கப்பட்ட டோணி, நேற்று டெல்லியில் விருதை பெற்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டோணிக்கு விருது வழங்கினார்.டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இரண்டாவது கட்ட பத்ம விருது வழங்கும் விழா நடந்தது. டோணி ராணுவ உடையில் விருது வாங்கினார்.

2018 Padma awards have announced. Dhoni gets 2018 Padma Bhushan from President. Cricket players wished Dhoni for 2018 Padma Bhushan award.

Recommended