மெரினாவில் மற்றுமொரு போராட்டத்திற்கு மீண்டும் ஒன்றுதிரண்ட இளைஞர்கள்

  • 6 years ago
தமிழக விவசாயிகளை பாதுகாப்பதற்காக சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போலீஸ் வாகனத்தில் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட போதும் போராட்டக்காரர்கள் வேடிக்கை பார்க்கும் தமிழகமே விவசாயிக்காக வீதிக்கு வந்து போராடு என்று முழக்கங்களை எழுப்பினர்.

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தின் பின்புறம் இருந்த கடற்கரைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டங்களை நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.

Youths gathered at Chennai Marina protest with the demands of CMB formation and sterlite closure were arrested and at the time of arrest too they raising slogans of people to come in streets and do protests to dave farmers.

Recommended