'மெர்சல்' படத்துக்கு உயரிய விருது- வீடியோ

  • 6 years ago
விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகியவை உலக அளவில் சாதனை படைத்தன. அதேபோல் வசூலிலும் ரூ.200 கோடியை தாண்டியது. அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கரமான வரவேற்பைப் பெற்றது. கடந்த வருடம் வெளியான தமிழ்ப் படங்களில் அதிக சர்ச்சைகளைச் சந்தித்ததும் இந்தப் படம் தான். ஜி.எஸ்.டி வரி குறித்த வசனம், மருத்துவத் துறையில் நடக்கும் ஊழல் போன்ற பல வசனங்கள் படத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரிட்டன் தேசிய திரைப்பட விழாவில் 'மெர்சல்' சிறந்த வெளிநாட்டு படம் என்ற விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று லண்டனில் நடைபெற்ற பிரிட்டனின் 4-வது தேசிய திரைப்பட விழாவில், 'மெர்சல்' திரைப்படத்துக்கு இந்த விருதை விழாக்குழுவினர் அறிவித்தனர். இந்த விருது முழுக்க முழுக்க ரசிகர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விருதாகும். இந்த வெற்றியை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த விருது படக்குழுவினரை வெகுவாக மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Vijay starrer 'Mersal' was released on Diwali last year and won. At the 4th Britain National Film Festival held in London yesterday, the Festival Committee announced the award for the film 'Mersal'.

Recommended