காலா கெட்டப்பில் வந்த சிம்பு- வீடியோ

  • 6 years ago
சிம்பு செய்துள்ள ஒரு காரியத்தால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திரையுலகில் உள்ள பலர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள் ஆவர். அதற்கு சிம்பு ஒன்றும் விதிவிலக்கு அல்ல. தான் ரஜினி ரசிகன் என்பதில் பெருமை கொள்பவர் சிம்பு. இந்நிலையில் அவர் ஒரு காரியம் செய்துள்ளார். டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் சிம்பு. அந்த நிகழ்ச்சிக்கு அவர் காலா படத்தில் வரும் ரஜினியின் கெட்டப்பில் வந்து ரசிகர்களை அசத்தினார். நான் சூப்பர் ஸ்டார் ரசிகன் என்று கூறி வரும் சிம்புவை காலா கெட்டப்பில் பார்த்த தலைவர் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சிம்புவின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஷேர் செய்து வருகின்றனர். அப்பா டி.ஆரை கலாய்ப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து சிம்பு பேசிய வீடியோ சரிகமப நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் சிம்புவே நேரடியாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

Simbu has attended a television programme in Kaala get-up proving once again that he is a die hard fan of Rajinikanth.