ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணத்திற்கு தயார்- வீடியோ

  • 6 years ago
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனேவுக்கு தற்போது 32 வயதாகிறது. தீபிகா இந்தி நடிகரும் தனது நெருங்கிய நண்பருமான ரன்வீர் சிங்கை காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை வைத்து இயக்கயிருந்த 'ராணா' படத்தில் நாயகியாக ஒப்பந்தமான தீபிகா படுகோனே, அந்தப் படம் கைவிடப்பட்டதால் பின்னர் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்த 'கோச்சடையான்' அனிமேஷன் படத்தில் நாயகியாக நடித்தார். இந்த நிலையில், தீபிகாவும், ரன்வீர் சிங்கும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தற்போது பாலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது. அதோடு, தனது திருமணத்தை தென்னிந்திய முறைப்படி நடத்த ஆசைப்படுகிறாராம் தீபிகா படுகோனே. அதனால், தற்போது தீபிகா, ரன்வீர் ஆகிய இருவரும் லண்டனில் இருக்கும் நிலையில், தீபிகாவின் அம்மா மற்றும் சகோதரி ஆகியோர் திருமணத்திற்கு தேவையான பொருட்களையும், தீபிகாவிற்கான நகைகளையும் பெங்களூரில் ஷாப்பிங் செய்து வருகிறார்களாம். விரைவில் இவர்களது திருமண அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

Deepika padukone and Ranveer singh to ready for their marriage. Deepika Padukone wants to have his wedding in South Indian style.

Recommended