கேளிக்கை வரி ரத்து செய்ய கோரிக்கை!- வீடியோ

  • 6 years ago
தமிழ் சினிமா துறையினர் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வரும் நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கேளிக்கை வரியை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். டிஜிட்டல் ஒளிபரப்பு, உள்ளாட்சி சேவை வரி விதிப்புக்கு எதிராக தமிழ் திரையுலகினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு சார்பில் நல்ல பதில் வராத காரணத்தால் கடந்த மூன்று வாரங்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் திரையரங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் சந்தித்துப் பேசினர். அந்தச் சந்திப்பில், 8% கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை திரையரங்க உரிமத்தை புதுப்பிக்கும் முறையை 3 ஆண்டுக்கு ஒரு முறை என மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திரையுலகம் தியேட்டர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பெரிய லாபம் இல்லாததாக மாறிவருவது தெரிகிறது. அதிகப்படியான செலவுகளைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே லாபம் ஈட்டமுடியும் என்கிற நிலையில் இருக்கிறது தமிழ் சினிமா.


While Tamil cinema industry is engaging in strikes, theater owners have requested TN CM Edappadi K.Palanisamy to cancel the entertainment tax.