நடிகரை நிர்வாணமாக வீடியோ எடுத்த ரசிகர்!

  • 6 years ago
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை ரசிகர் ஒருவர் நிர்வாணமாக வீடியோ எடுத்த சம்பவம் நடந்துள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ளார் ரன்வீர் சிங். பத்மாவத் படத்தில் அலாவுத்தீன் கில்ஜியாக நடித்து ரசிகர்களை மிரட்டினார். அவரின் நடிப்பை பார்த்து அனைவரும் அசந்து போனார்கள். இந்நிலையில் ரசிகர்கள் பற்றி ரன்வீர் சிங் கூறியிருப்பதாவது, ஒரு முறை நான் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்தேன். அப்போது அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் என்னை வீடியோ எடுத்தார். அந்த நபர் என்னை வீடியோ எடுத்த போது நான் நிர்வாணமாக இருந்தேன். உடையை தேடாமல் அவரிடம் ஓடிச் சென்று செல்போனை பறித்து அந்த வீடியோவை நீக்கிவிட்டேன். இது போன்று சிலர் உள்ளனர். என் ரசிகர்கள் யார், சேட்டை செய்பவர்கள் யார் என்று எனக்கு தெரியும். ஒரு முறை நான் கழிவறையில் சிறுநீர் கழித்தபோது ஒருவர் என்னை வீடியோ எடுத்தார். நான் சிறுநீர் கழித்ததை வீடியோ எடுத்தவரின் செல்போனை பறித்து அந்த வீடியோவை நீக்க வேண்டியதாகிவிட்டது. நான் முதல் படத்தில் நடித்து முடித்திருந்தபோது ஜுஹு பகுதியில் உள்ள மால் ஒன்றுக்கு சென்றேன். அந்த மாலில் வைக்கப்பட்டிருந்த பேண்ட் பஜா பாரத் பட புகைப்படங்களை பார்த்துவிட்டு இந்த மூஞ்சி எல்லாம் ஒரு ஹீரோவா என்று கூறி மக்கள் நக்கலாக சிரித்தார்கள் என்றார் ரன்வீர் சிங்.

Actor Ranveer Singh said in an interview that once a fan filmed him naked in a gym. Some other guy filmed him while he was in the restroom.

Recommended