பிரியா வாரியரால் சஸ்பெண்ட் ஆன கல்லூரி மாணவிகள்!- வீடியோ

  • 6 years ago
ப்ரியா வாரியர் போன்று கண்ணடித்தால் ஓராண்டு சஸ்பெண்ட் செய்யப்படும் என்று கோவையில் உள்ள கல்லூரி ஒன்று மாணவிகளை எச்சரித்துள்ளது. ஒரு அடார் லவ் மலையாள படத்தில் நடிகை ப்ரியா வாரியர் பள்ளி வகுப்பில் அமர்ந்து கொண்டு சக மாணவனை பார்த்து கண்ணடித்த காட்சி மிகவும் பிரபலமானது. வகுப்பில் அத்தனை மாணவ, மாணவியர் இருக்க ப்ரியா சக மாணவன் ஒருவருக்கு பறக்கும் முத்தம் கொடுத்த காட்சியும் பிரபலமானது. அதில் இருந்து பல மாணவிகள் ப்ரியா போன்று கண்ணடிக்க முயற்சிக்கிறார்கள். இந்நிலையில் கோவையில் உள்ள பிரபல கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று மாணவிகளை எச்சரித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, மாணவிகள் ப்ரியா வாரியர் போன்று கண்ணடிப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. யாராவது ப்ரியா வாரியர் மாதிரி கண்ணடித்தால் கல்லூரியில் இருந்து ஓராண்டு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A popular college in Coimbatore has warned its girl students not to imitate Priya Varrier's wink in the premises. It has warned that those who are caught winking like Priya will be debarred for a year from the college.

Recommended