நிஜ வாழ்க்கையிலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!- வீடியோ

  • 6 years ago
என் வழி தனி வழின்னு சென்று கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. கை நிறைய படம் வைத்துக் கொண்டு பிசியாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. மணிரத்னம் படம், ரஜினிகாந்த் படம் என்று அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருகின்றன. அவர் ஹீரோவாக நடித்தாலும், வில்லனாக நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ரசிகர்கள் விஜய் சேதுபதியை எங்காவது பார்த்துவிட்டு செல்ஃபி கேட்டால் உடனே அவர் பந்தா செய்வது இல்லை. அந்த ரசிகரை பாசமாக கட்டிப்பிடித்து செல்ஃபிக்கு போஸ் கொடுக்கிறார். ரசிகர்களை பார்த்தால் கட்டிப் பிடிப்பதோடு மட்டும் அல்லாமல் அவர்களின் கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார் விஜய் சேதுபதி. அவரின் அன்பால் ரசிகர்கள் கிளீன் போல்டாகிவிடுகிறார்கள். விஜய் சேதுபதியை சும்மா ஒன்னும் மக்கள் செல்வன் என்று சொல்லவில்லை. நேரில் பார்த்தால் கொஞ்சம் கூட திமிர், பந்தா இல்லாத ஆளாக உள்ளார் என்று ரசிகர்கள் பெருமைப்படுகிறார்கள். விஜய் சேதுபதிக்கு ஹேட்டர்ஸே(வெறுப்பவர்கள்) இல்லை என்கிறா்கள் ரசிகர்கள். ஆனால் அவரோ யார் சொன்னது ஃபேஸ்புக் பக்கம் போய் பாருங்க ஹேட்டர்ஸ் இருப்பது தெரியும் என்று வெள்ளந்தியாக பேசுகிறார்.

Vijay Sethupathi is impressing his fans in real life by being very kind to them. He hugs his fans and kisses them on cheek. Fans love this gesture of Vijay Sethupathi.

Recommended