சுற்றுல்லா பயணிகளுக்கு ஓர் நற் செய்தி... ஊட்டியில் கோடை சீசன் ஸ்பெஷல்...

  • 6 years ago
கோடை சீசன் தொங்க உள்ளதை முன்னிட்டு மலை ரயில்பாதையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளதற்கு சுற்றுல்லா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மலைகளின் அரசியான ஊட்டியில் கோடை சீசன் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. கோடை சீசன் தொடங்க உள்ளதால் ஊட்டியின் மலை அழகை ரசிக்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் எண்ணற்ற நாடுகளை சேர்ந்தவர்களும் ஆண்டு தோரும் கோடைகாலத்தில் லட்சகணக்கானோர் ஊட்டிக்கு வந்து அதன் அழகை ரசித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அது போல் இந்த ஆண்டு கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் மலைகளின் நடுவில் ஊர்ந்து செல்லும் ரயிலில் சுற்றுல்லா பயணிகள் பயணம் செய்ய தவறுவதில்லை. சீசன் நேரங்களில் மலை ரயிலில் பயணம் செய்ய அனைவரும் ஆர்வம் காட்டுவதால் பலபேர்களுக்கு ரயில்களில் இடம் கிடைக்காமல் போய் ஏமாற்றம் அடைகின்றனர். சுற்றுல்லா பயணிகளின் ஏமாற்றத்தை போக்க தென்னக ரயில்வே இந்த ஆண்டு கூடுதல் ரயில்களை இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ரயில்வேயின் இந்த அறிவிப்பு இந்த வருடம் கோடை சீசனுக்கு சுற்றுல்லாவிற்கு வருபவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

The Southern Railway has announced that additional trains will be operated on the mountain railroads for the summer season.

Recommended