சூர்யா - கே.வி.ஆனந்த் - ஹாரிஸ் ஜெயராஜ்- கூட்டணி மீண்டும்- வீடியோ

  • 6 years ago
சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு NGK என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்து சூர்யா - கே.வி.ஆனந்த் இணையும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வந்துள்ளது. இயக்குனர் கே.வி.ஆனந்த் தங்களது படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்று தெரிவித்துள்ளார். 'அயன்', 'மாற்றான்' படங்களைத் தொடர்ந்து சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் 'என்ஜிகே' படத்தில் நடித்து வரும் சூர்யா இதை முடித்ததும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சூர்யாவின் 37-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, கிரண் கலை இயக்கத்தை கவனிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா - கே.வி.ஆனந்த் இணையும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்று கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைவது இது மூன்றாவது முறை ஆகும். இதற்கு முன் கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணியில் வெளிவந்த 'அயன்', 'மாற்றான்' ஆகிய படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்தார். அவற்றைப் போலவே, இந்தப் படத்திலும் பாடல்கள் பட்டையைக் கிளப்பும் என ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.


Suriya doing next film with KV Anand. Harris jayaraj to be compose music for this film produced by lyca productions.

Recommended