முதன் முறையாக வெளியான ஐபிஎல் கீதம்

  • 6 years ago
ஐபிஎல் 11வது சீசன் ஜூரம் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், ரசிகர்களின் டெம்பரேச்சரை எகிற வைக்கும் வகையில், அதிரடியான, ஐபிஎல் ஆந்தம் எனப்படும் ஐபிஎல் குறித்த பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாகியுள்ளது. ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன், ஏப்ரல் 7ம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுகிறது

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், 11வது சீசனில் விளையாட உள்ளன. இதனால், இந்த ஆண்டு போட்டி ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரர்கள் ஏலத்தில், கேப்டன் கூல் டோணியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ipl season 11 new anthem released

Recommended