1000 ரூபாய் வழிகாட்டி சிக்கினார்...வனத்துறையினர் விசாரணை...வீடியோ

  • 6 years ago
மலையேற்றத்திற்கு வழிகாட்டியாக தனியார் கெய்டுகளை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் குரங்கனி மலைப்பகுதியில் கடந்த வாரம் முதல் காட்டுத் தீ பிடித்து பற்றி எரிந்து வருகிறது. சென்னை திருப்பூர் கோவை ஈரோடு கடலூர் என்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த 36 பேர் மலையேற்றம் சென்றனர். அவர்கள் கொழுக்குமலையில் இருந்து குரங்கனி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது குரங்கனி மலைப்பகுதியில் ஏற்பட்டிருந்த காட்டுத் தீ காற்றின் வேகத்தினால் திடீரென பரவ மலையேற்றம் சென்றவர்கள் காட்டுத் தீயின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டனர். காட்டுத் தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 26 பேர் மீட்கப்பட்டு தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மலையேற்ற பயிற்சி மையத்தின் மூலம் சென்ற இவர்களுக்கு மலைப்பகுதியில் வழிகாட்டியாக செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்யும் படி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து வனத்துறையிர் மேற்கொண்ட விசாரணையில் தேனியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் உதவியது தெரிய வந்துள்ளது.

DES : Forest guards are conducting private kites to guide the trek.