என்ன ஆச்சு தேனாண்டாள் நிறுவனத்துக்கு?- வீடியோ

  • 6 years ago
மிகக் குறைந்த, கையை கடிக்காத பட்ஜெட்டில் எடுத்து கமர்ஷியலாக லாபம் பார்ப்பதை தமிழ் சினிமாவுக்கே கற்றுக் கொடுத்தவர் அமரர் ராம.நாராயணன். சின்ன கல்லு பெத்த லாபம் என்பது தான் அவரது தேனாண்டாள் நிறுவனத்தின் கொள்கை. அவரது மறைவுக்கு பிறகு நிறுவனம் அவரது வாரிசுகள் கைகளில் போனது. பெரிய அளவில் தயாரிக்கலாம் என்று வரிசையாக மெகா புராஜக்ட்களுக்கு திட்டமிட்டார்கள். அதில் முக்கியமானவை மெர்சலும் சங்கமித்ராவும். மெர்சல் பட்ஜெட் எகிறி அதனாலேயே படம் நன்றாக ஓடியும் நஷ்டம் ஏற்பட்டது. அதன் பின்னர் தேனாண்டாளுக்கு வரிசையாக அடிகள் தான் என்கிறார்கள். எடுத்துக்கொண்டிருந்த படங்கள் அப்படியே நிற்கின்றன. எடுக்க திட்டமிட்ட படங்களையும் தொடங்குவதற்கான அறிகுறிகளே தெரியாததால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. டிக் டிக் டிக் படத்தை முதலில் வாங்கி வெளியிடத் தீர்மானித்தவர்கள். இப்போது விலகி விட்டார்களாம். இயக்குநர் சசி - ஜிவி பிரகாஷ் - சித்தார்த் கூட்டணியில் உருவாகவிருந்த ரெட்டைக்கொம்பு படமும் நிறுத்தம். சந்தானம் - எம்.ராஜேஷ் கூட்டணி படம், தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படம், சங்கமித்ரா என்று வரிசையாக ட்ராப் ஆவதாகச் சொல்லப்படுகிறது. இதெல்லாம் செட் ஆகாது... ராம.நாராயணன் பாலிசியை திரும்ப கையில் எடுங்க... அப்புறமா அகலக்கால் வைக்கலாம் என்று யோசனை சொல்லி வருகிறார்களாம் நெருங்கிய நட்புகள்.

Thenandal company is in big trouble due continous drop of their ongoing projects.

Recommended