கோடை காலத்தில் டிரக்கிங் போகவே போகாதீங்க...வீடியோ

  • 6 years ago
கோடை காலத்தில் டிரெக்கிங் எனப்படும் மலையேற்ற பயிற்சிக்கு போகவே கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தேனி மாவட்டம், குரங்கணி காட்டு பகுதியில் நேற்று காட்டு தீ பற்றி எரிந்தது. இதில் கோவை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 36 பேர் சென்றிருந்தனர். கோடை காலத்தில் மலையேற்ற பயிற்சிக்கு செல்லவே கூடாது. மேலும் வனத்துறையினரின் அனுமதியின்றியோ துணையின்றியோ செல்லவே கூடாது. இதற்காக தனியார் நிறுவனங்கள் வனத்துறையிடம் அனுமதி கேட்டு கொடுக்கவில்லை என்றால் மாற்று வழியில் அழைத்து செல்கின்றனர். இதுபோன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று மலையேற்ற பயிற்சிக்கு மாற்று வழியில் சென்றது குறித்து வனத்துறைக்கு தெரியாது.

இதுபோல் பணத்துகாக சில நிறுவனங்கள் இதுபோல் பாதுகாப்பின்றி ஒரு பயணத்தை ஏற்பாடு செய்கின்றன. விலங்குகளின் வீட்டுக்கு செல்லும் நாம் இதுபோல் மாற்று வழியில் காட்டு பகுதிக்கு செல்லவே கூடாது. இதுபோல் செல்லும் போது விலங்குகளினாலும் துன்பம் ஏற்பட வாய்ப்புண்டு. இதே மலையேற்ற பயிற்சிக்காக காட்டு பகுதிக்கு செல்லும் போது உள்ளூர் மக்களின் துணையோடு செல்வது சாலச்சிறந்தது. மேலும் வனத்துறையினரிடம் அனுமதி பெற்று களப்பணியாளர்களுடன் செல்ல வேண்டும். நேற்று மலையேற சென்ற குழுவினருடன் உள்ளூர் மக்கள் சென்றிருந்தால் எங்கோ தீப்பற்றி எரியும் வாசத்தை வைத்தே எச்சரிக்கை கொடுத்திருக்க முடியும். மேலும் விலங்குகளின் சாணத்தை பார்த்தும் எச்சரிக்கை கொடுப்பர். மலையேற்ற பயிற்சிக்கு உள்ளூர் மக்கள், வனத்துறையினரின் களப்பணியாளர்கள் ஆகியோருடன் 15 பேர் மட்டுமே செல்ல வேண்டும். அப்போதுதான் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் போது காப்பாற்ற இயலும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.