நோட்டா பிரஸ் மீட்டில் பேசிய பிரபலங்கள்!- வீடியோ

  • 6 years ago
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இதில் ஹீரோவாக நடித்த விஜய் தேவரகொண்டா, முதன்முறையாக நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சத்யராஜ், எம்எஸ் பாஸ்கர் என பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்க, ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு 'நோட்டா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்த பெல்லி சூப்புலு, அர்ஜுன் ரெட்டி ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் தற்போது அவர் தமிழ், தெலுங்கில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தயாராகும் 'நோட்டா' படத்தின் மூலம் தமிழுக்கும் வருகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திருக்குறள் சொல்லிப் பேசத் தொடங்கினார் விஜய் தேவரகொண்டா. இந்த படத்தின் பிரஸ் மீட்டில் யார் யார் என்ன பேசினார்கள் என்று பார்க்கலாம்.


Vijay Devarakonda is coming to Tamil through the film 'NOTA' directed by Anand Sankar. "I will talk Tamil dubbing in this film. I will learn Tamil within shooting days," said Vijay Devarakonda. Let us see what the celebrities have to say at the press meet of this movie.

Recommended