ஸ்ரீதேவியின் மரணம் வெளியுறவுத் துறை சந்தேகம்!

  • 6 years ago
ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் நடிகரும் ஸ்ரீதேவியின் நாத்தனார் மகனுமான மோஹித் மார்வாவின் திருமணத்துக்காக தனது கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் துபாய் சென்றார் ஸ்ரீதேவி. அங்கு தங்கியிருந்த ஹோட்டலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக சொல்லப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அவர் பாத்டப்பில் நீரில் மூழ்கி இறந்தார் என்றும் குற்றவியல் நோக்கம் ஏதும் இல்லை என்றும் கூறியிருந்தது. இதையடுத்து சில நடைமுறைகளுக்கு பிறகு, அவரது உடல் பிப்ரவரி 27-ஆம் தேதி மும்பைக்கு கொண்டு வரப்பட்டு மறுநாள் தகனம் செய்யப்பட்டது. எனினும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கருத்துகள் நிலவின. மேலும் அவரது தலையில் காயம் இருந்ததாக ஏகப்பட்ட உறுதி செய்யப்படாத கருத்துகள் அவரது மரணத்தை சூழ்ந்தன. எந்த மர்மமும் இல்லாதததால்தான் இந்தியாவுக்கு அவரது உடல் கொண்டு செல்வதற்கு துபாய் அரசு அனுமதி அளிக்கப்பட்டது என்கிற போதிலும் சந்தேகங்கள் விலகி பாடில்லை. இந்நிலையில் இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறுகையில், நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் ஏதும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அது இன்னேரம் வெளியே வந்திருக்கும் என்று கூறியுள்ளது.


The Ministry of External Affairs (MEA) on Friday rejected claims of foul play on the sudden demise of Bollywood actress Sridevi and clarified that if there was anything suspicious, it would have come out by now.

Recommended