தெலுகு நாச்சியார் ஆகும் அனுஷ்கா!- வீடியோ

  • 6 years ago
நாச்சியார் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனுஷ்காவை நடிக்க வைக்க விரும்புகிறார்கள். பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான நாச்சியார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜோதிகா, ஜி.வி. பிரகாஷின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். குறிப்பாக ஜி.வி.க்கு பாராட்டுக்கள் வந்து குவிந்தது. நாச்சியார் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை ரூ. 90 லட்சத்திற்கு விலை போனது. ஆனால் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யுமாறு பாலா கோரிக்கை விடுத்தார். ஜோதிகா கதாபாத்திரத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க விரும்புகிறார்கள். ஆனால் அனுஷ்கா படுபிசியாக இருப்பதால் இந்த ரீமேக்கில் நடிக்க சம்மதிப்பாரா என்பது சந்தேகமே. அனுஷ்கா நடிப்பில் கடைசியாக வெளியான படம் பாகமதி. அசோக் இயக்கிய அந்த படம் இந்தியா மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் நல்ல வசூல் பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Buzz is that Anushka is considered for the telugu remake of Bala's Naachiyaar. If Anushka refuses to act, then the movie will be reportedly dubbed in telugu and released.

Recommended