கொல்கத்தாவில் மேலும் ஒரு சிலை உடைப்பு..மோடியின் முடிவு- வீடியோ

  • 6 years ago
புரட்சியாளர் லெனின், தந்தை பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். திரிபுராவில் பாஜகவினரால் லெனின் சிலை அகற்றப்பட்டது. அந்த பரபரப்பு ஓயும் முன்பாக, நேற்று இரவு தமிழகத்தின் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருந்தார். இதற்கு எதிராக தமிழகம் கொந்தளித்தது. இதனால் எச். ராஜா தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொல்கத்தாவில் பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 6 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Recommended