10 கிராமங்களை தத்தெடுக்கும் கமல்!- வீடியோ

  • 6 years ago
திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தத்தெடுத்துள்ள கிராமத்தை முன்மாதிரியாக வைத்து தங்களது கிராமங்கள் தத்தெடுப்பு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறாராம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியைத் துவக்கி தனது அரசியல் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் கமல். தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக மக்களிடம் நெருங்குவதற்கான செயல்திட்டங்களைத் தயாரிப்பதில் முழு கவனம் செலுத்துகிறார்கள் கமலின் கொள்கை வகுப்பாளர்கள். அதில் ஒன்று கிராமங்களைத் தத்தெடுத்தல். இந்த யோசனையை கமலிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தமிழகம் முழுவதையும் கவர் பண்ணுகிற மாதிரி 4 திசைகளையும் உள்ளடக்கி 10 கிராமங்களை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார் கமல்


Sources said that Makkal Neethi Maiyam leader Kamal Haasan wlll adopt 10 Villages in TamilNadu

Recommended