சளைக்காமல் வாங்கிக் கட்டிக் கொள்ளும் எச்.ராஜா- வீடியோ

  • 6 years ago
வடகிழக்கு மாநில தேர்தல்கள் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து பதிவிட்டதற்கு அவரை பாரபட்சம் இல்லாமல் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயம் ஆகிய தேர்தல்களில் திரிபுராவில் 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி முடிவு வந்து அங்கு பாஜக தலைமையில் ஆட்சி அமைய உள்ளது. அதுபோல் மற்ற இரு மாநிலங்களில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் வடகிழக்கு என்பது ஈசான்ய மூலை ஆகும். ஈசான்ய மூலையில் பூஜை அறை இருக்கவேண்டும். இன்று இந்தியாவின் ஈசான்ய மூலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு நாட்டின் பூஜை அறை தெய்வீகம் பெற்றுள்ளது. இனி இந்தியாவிற்கு என்றுமே வெற்றிதான்.


H.Raja tweet about North East State election and called it as country's Ishan corner. The garbage in the Ishan corner removed, he claims. Netisans blasted him for his comments.