காவிரி உரிமைக்காக வாழப்பாடியார் போல பதவியை தூக்கி எறிவாரா ?

  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் விதமாக தமிழகத்தில் இருந்து செல்ல இருந்த குழுவை பார்க்க மத்திய அரசு மறுத்துவிட்டது. தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் விளைவிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் இருந்து மத்திய இணை அமைச்சராக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வாரா? காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த பிப்ரவரி 16ம் தேதி இந்த உத்தரவை பிறப்பித்த நிலையில் இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதோடு மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்திலும் பதில் அளித்துள்ளது.


Will Union minister Pon.Radhakrishnan resign his post for cauvery rights? as centre is continuously rejecting the judgements by Supreme court to form Cauvery management board.

Recommended