60 வருடங்களாக இதை மட்டும் மாற்றாமல் இருக்கும் எலிசபெத்- வீடியோ

  • 6 years ago
இங்கிலாந்து ராணியான எலிசபெத் கடந்த 60 ஆண்டுகளாக ஒரே மாதிரியான சிறிய வகை ஹேண்ட்பேக்குகளையே பயன்படுத்தி வருகிறார். இங்கிலாந்து நாடு ராணி எலிசபெத் 2 ஆட்சியின் கீழ் உள்ளது. இவர் கடந்த 1953ம் ஆண்டு இங்கிலாந்து ராணியாக முடி சூடினார். இவர் ராணியாக பதவியேற்று 64 ஆண்டுகள் ஆகின்றன. இங்கிலாந்து அரச பரம்பரையினர் அணியும் ஆடைகள் எப்போதுமே பேஷன் உலகின் கவனிக்கத் தக்கவை. அந்தவகையில், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 92 வயதான ராணி எலிசபெத்தின் உடைகளும் இருக்கும்.

ஆனால், விதவிதமான உடைகள் அணிந்தாலும், கடந்த 60ஆண்டு காலமாக அவர் ஒரே மாதிரியான ஹேண்ட் பேக் மாடலையே பயன்படுத்தி வருகிறார். அதிக உலகநாடுகளுக்குப் பயணம் செய்தவர் என்ற புகழுக்குச் சொந்தக்காரரான எலிசபெத், அரசு விழா உட்பட வெளி நிகழ்ச்சிகள் அனைத்திலும் சிறிய வடிவத்தில் உள்ள கைப்பையையே கையில் வைத்துள்ளார்.

For almost 60 years, Queen Elizabeth II has been carrying a near-identical version of the same bag, according to New Idea Magazine.

Recommended