சாலையை செப்பனிட கடை அடைத்து மறியல் போராட்டம்- வீடியோ

  • 6 years ago


திருவாரூர் கன்னியாகுமரி மாவட்டங்களில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்

திருவாரூரில் நாகை-திருவாரூர் தஞ்சை நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளது இதனை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்காலை துறையில் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க பட வில்லை இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி வணிகர்கள் நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி 4000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் பழுதடைந்த சாலைகளை செப்பனிட வலியுறுத்தி 1000க்கும் மேற்ப்பட்ட கடைகள் அடைத்து பொது மக்கள் மற்றும் வணிகர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர் சாலைகளை செப்பனிட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்றும் இந்த சாலையில் வாகன ஓட்டுனர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் வாகனங்கள் கடந்து செல்லும்போது தூசி மற்றும் புகைமண்டலமாக படர்ந்து மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். என்றும் வணிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

DES : Traders are stamping on the road to repair roads in Kanyakumari districts of Tiruvarur

Category

🗞
News

Recommended