pros and cons of six deliciousஅறுசுவைகளின் நன்மை தீமைகள் 960x540 2.14Mbps 2018-02-26 11-36-11

  • 6 years ago
Pros and Cons of six delicious /அறுசுவைகளின் நன்மை தீமைகள்


ஆரோக்கியமும், நோயும்... நாம் உண்ணும் உணவைப் பொறுத்தே அமைகின்றன. தவறான உணவுகளை உண்ணும்போது அஜீரணம் உண்டாகி, அதனால் உடம்பில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால் உடலில் நச்சுத் தன்மை அதிகரித்து நோய்கள் உடம்பை தாக்குகின்றன.
சிறந்த உணவை சரியான வேளையில் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும், மனதில் புத்தி சாமர்த்தியமும், நற்பண்புகளும் உண்டாகின்றன. எந்த நோயும் அணுகாது. ஆயுர்வேதத்தில் உணவுகள் அனைத்தும் அறுசுவையை அடிப்படையாக கொண்டுள்ளன. அறுசுவை பஞ்ச பூதங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது. 
* பிறந்தது முதல் உடலுக்கு இனிப்புச் சுவை ஏற்றதாக இருக்கிறது. பொதுவாக இனிப்புச் சுவை உடலுக்கு பலத்தை அளிக்கும். எலும்புருக்கி நோயாளிகளுக்கு நல்லது. உடலை பருக்கச் செய்யும்.
 
* புளிப்புச் சுவை பசியைத் தூண்டும். இருதயத்திற்கு நல்லது. ருசியை உண்டாக்கும். உஷ்ணவீரியம் உடையது. 
* உவர்ப்பு பசியைத் தூண்டும். வேர்வையை உண்டாக்கும். அதிகமாக உப்பை சேர்த்தால் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும். 
* கசப்புச் சுவை கொழுப்பை வற்ற வைக்கும். மலம், சிறுநீரை குறைக்கும். எளிதில் ஜீரணமாகும். குளிர்ச்சியானது, தொண்டையை சுத்தம் செய்யும்.
* காரம் தோல்தடிப்பு, வீக்கம், தொண்டை நோய் ஆகியவற்றைப் போக்கும். கொழுப்பை உலரச் செய்யும். 
* துவர்ப்பு வாதத்தை அதிகரிக்கும். பித்த கபங்களைக் குறைக்கும். ஆனால் எளிதில் ஜீரணமாகாது. ரத்தத்தை சுத்தம் செய்யும். கொழுப்பைக் குறைக்கும்.

YouTube: https://www.youtube.com/channel/UCPRaiK-1PlP9Vbq6vOamuAg?disable_polymer=true
Daily motion:
https://www.dailymotion.com/mnstargroup
Blogger:
https://mnstargroup.blogspot.com/?m=1
Instagram:
https://www.instagram.com/ayurveda_star/
Twitter:
https://mobile.twitter.com/lifestyle_tamil