சச்சினுக்கு பரிசு கொடுத்த ப்ரியா வாரியர்- வீடியோ

  • 6 years ago
ஒரு கண்சிமிட்டல் பாடல் மூலம் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். கடந்த சில நாட்களாக இணைய தளங்களில் பிரியாவாரியர் பற்றிய தகவல்களாகவே வந்து கொண்டு இருக்கின்றன.

பிரியா வாரியர் நடித்த பாடல் வரிகள் குறித்த சர்ச்சையால், சில மாநிலங்களில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு தடை விதித்துள்ளது. இதனால் பிரியாவாரியர் பற்றிய பரபரப்பான பேச்சு மேலும் அதிகமாகி விட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கொச்சியில் நடந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணியுடன் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் கேரள அணியை உற்சாகப்படுத்துவதற்காக பிரியா வாரியரும், அவருடன் ‘ஒரு அடார் லவ்’ படத்தில் நடிக்கும் ரோ‌ஷனும் சென்று இருந்தனர்.

Recommended