அரசியலுக்கு வருவேன்: சிம்பு அதிரடி- வீடியோ

  • 6 years ago
தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என எல்லோரும் ஒன்றாக இணையும் தருணத்தில் நான் அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டுமா வரக்கூடாதா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் சிம்பு தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அதிரடி அரசியல் பிரவேசங்களைத் தொடர்ந்து நடிகர்கள் பலரும் அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்படுகிறது.
அரசியலில் சிம்பு இந்த நிலையில் நடிகர் டி.ராஜேந்தர் வரும் 28-ம் தேதி தனது அரசியல் பயணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், அவரைத் தொடர்ந்து அவரது மகன் சிம்புவும் தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என எல்லோரும் ஒன்றாக இணையும் தருணத்தில் நான் அரசியலுக்கு வருவேன் எனத் தெரிவித்துள்ளார்.
எனக்கு எதிராக யார் இருக்கிறார்கள் என தெரியாமல் விஷால் மீது குறை சொல்ல முடியாது என்று சிம்பு தெரிவித்துள்ளார். ஆக, ரஜினி, கமல் ஆகியோரைத் தொடர்ந்து அடுத்த தலைமுறை நடிகர்களும் அரசியல் களம்காண ஆயத்தமாகிவிட்டனர் என்றே தெரிகிறது.

Simbu said that people should decide whether the actors should come to politics. Simbu also interested to enters politics.

Recommended