மயிலும் சப்பாணியும் கடைசியாக சந்தித்த தருணங்கள்- வீடியோ | Oneindia Tamil

  • 6 years ago
தமிழக ரசிகர்களின் 'மயில்' ஸ்ரீதேவி நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். கடந்த மாதம் ஸ்ரீதேவியை கமல்ஹாசன் கடைசியாக சந்தித்த வீடியோ இது,.

சென்னை: தமிழ் சினிமாவில் மூன்று முடிச்சு, 16 வயதினிலே தொடங்கி 27 படங்களில் இணைந்து நடித்தனர் கமல்ஹாசனும் மறைந்த ஸ்ரீதேவியும். மயிலு- சப்பாணி பாத்திரங்களும் சீனு- விஜி பாத்திரங்களும் தமிழ் சினிமா சரித்திரத்தின் பக்கங்கள்.

ஸ்ரீதேவியின் மறைவு குறித்து வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ள கமல், கண்ணதாசன் எழுதித் தந்த கண்ணே...கலைமானே தாலாட்டைத்தான் இப்போது ஸ்ரீதேவிக்கு பாட வேண்டும் என நெகிழ்ந்தும் உருக்கமாகவும் கூறியுள்ளார். கடந்த மாதம்தான் ஸ்ரீதேவியை தாம் கடைசியாக சந்தித்த தருணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மும்பையில் கடந்த மாதம் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஸ்ரீதேவிதான் கமலுக்கு வழங்கினார்.

அப்போது பேசிய கமல், ஸ்ரீதேவியிடம் இருந்து விருதை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.. எனக்கு மலரும் நினைவுகள் வருகின்றன என பதிவு செய்திருந்தார்.


Kamal Hassan and Sridevi met eachother at Mumbai HT Awards 2018 function in Last month.

Recommended