விஷால் - ஆதிக் மற்றும் சிம்புக்கு போட்டி- வீடியோ

  • 6 years ago
தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் போய்விட வேண்டும் என்று நினைப்பது சினிமாவிலும் அரசியலிலும் சகஜம். அப்படி ஒரு சம்பவத்தை தான் சிம்பு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

சிம்புவிடம் தாங்கள் எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டோம் என்பதை அன்பானவன் அசராதவன் அடங்காதவன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் தாரை தாரையாக கண்ணீர் வடித்து விளக்கினார்கள். அதன் பின் சிம்பு மீதான புகார் தயாரிப்பாளர் சங்கத்தில் நிலுவையில் இருப்பதும் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நஷ்டமடைந்து இருக்கும் மைக்கேல் ராயப்பனுக்கு உதவும் வகையில் சம்பளமே வாங்காமல் ஒரு படம் நடித்துக்கொடுக்கவிருப்பதாக வாக்கு கொடுத்தார் விஷால். அந்தப் படத்தை ஆதிக் இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சிம்புவும் ஆதிக்கும் பேசும் ஒரு ஆடியோ வெளியானது. இதில் சிம்புவுக்கு ஆதரவாக ஆதிக் பேசுவது அப்பட்டமாக தெரிந்தது. ஆதிக் தரப்பில் இருந்து இது வெளியாக வாய்ப்பே இல்லை. எனவே சிம்பு தரப்பு தான் விஷால் ஆதிக் இணைவதை தடுக்க இந்த ஆடியோ வெளியிட்டிருப்பதாக சந்தேகிக்கின்றனர் சினிமாவில். சிம்புவின் முயற்சிக்கு பலனாக ஆதிக்குடன் இணைவதை மறுபரிசீலனை செய்துவருகிறாராம் விஷால்.
அரசியலுக்கு வருவதற்கான அனைத்து தகுதிகளும் சினிமாக்காரங்களுக்கு இருக்குல்ல?


K town is doubting that Simbu has released the audio conversation between him and Aadhik to break the Vishal - Aadhik combo.

Recommended