அணிமாற தயாராகும் அதிமுகவினர்- வீடியோ

  • 6 years ago
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் ராமராஜன் உள்ளிட்ட பலரும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை செல்வம் அதிமுகவில் இருந்து மதிமுகவிற்கு சென்று விட்டார். அனிதா குப்புசாமி அதிமுகவில் இருந்து விலகி விட்டார். இப்போது புதுக்கோட்டை செல்வமும் மதிமுகவிற்கு சென்று விட்டார். இதே போல பல நட்சத்திர பேச்சாளர்கள், அதிமுக செய்தி தொடர்பாளர்கள் அதிமுகவை விட்டு விலக தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையை சேர்ந்த அதிமுக செய்தி தொடர்பாளர் புதுக்கோட்டை செல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தாயகத்தில் சந்தித்து மதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து முதலில் விலகியவர் ஆர்த்திதான். அதிமுகவில் இருந்து விலகிய அனிதா குப்புசாமி, பெண்களுக்கு அதிமுகவில் பாதுகாப்பு இல்லை என்று கூறினார். நமீதாவோ திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியோர் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள்.

AIADMK's star spokesperson Ramarajan is dissatisfied.Famous folk singer Anitha Kuppusamy quits ADMK and announced not yet decided to join in any party or admk rivalry faction.No safety for women in admk anitha kuppusamy said.

Recommended