வெளுத்து வாங்கும் த்ரிஷா

  • 6 years ago
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. சமீபகாலமாக வளர்ந்து வரும் நடிகைகளால் தமிழ் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து வருகிறார். குறைவான படங்களில் நடித்து வந்தாலும், சிம்ரனுக்கு பிறகு ரசிகர்களால் அதிகமாகக் கொண்டாடப்பட்ட ஒல்லி நடிகை இவர்தான். விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து சாமி ஸ்கொயர் படத்தில் நடிப்பதாக இருந்து பிறகு அதிலிருந்து விலகினார். இந்த விவகாரத்தால் தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் உருவானதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை த்ரிஷா பாக்‌சிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஜிம்மில் ஒரு ஆணுடன் இணைந்து பாக்‌சிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் த்ரிஷா. இந்த வீடியோவை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்த 'ஹே ஜூட்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து தனது உடலை எப்போதும் ஸ்லிம்மாக வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். இதற்காக எப்போதும் ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் த்ரிஷா.

Actress Trisha Boxing video goes viral now. In this video, Trisha is involved in boxing training with a man in Gym.

Recommended