நானும் ரஜினிகாந்தும் முடிவு எடுத்துள்ளோம் - கமல்ஹாசன்- வீடியோ

  • 6 years ago
அரசியலில் எதிரும் புதிருமாக நின்றாலும் மரியாதை குறைய கூடாது என்பதில் நானும் ரஜினிகாந்தும் முடிவு எடுத்துள்ளோம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். மேலும் மற்ற தலைவர்களை சந்திக்கும் முன்பே தான் ரஜினியை ரகசியமாக சந்தித்தேன் என்றும் கமல் தெரிவித்தார். கமல்ஹாசன் நேற்றைய தினம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இதற்காக மதுரையில் பொதுக் கூட்டத்தை நடத்தி அதில் அறிவித்தார். அதற்கு முன்னதாக சென்னையில் தனக்கு பிடித்தமான தலைவர்களை கமல் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ரஜினியை கடந்த இரு தினங்களுக்கு முன் அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் கமல் சந்தித்தார். அப்போது மதுரை பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாகவும் பொதுக் கூட்டத்துக்கு செல்லும் முன் தனக்கு பிடித்தமானவர்களை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Kamalhassan reveals that he already says his decision to start party to Rajini when he was in Biggboss shooting.

Recommended